இந்தியா ஜெயிச்சிருச்சு… பாகிஸ்தான் வெளியேறிடுச்சு…!

இந்தியா ஜெயிச்சிருச்சு… பாகிஸ்தான் வெளியேறிடுச்சு…!

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதிக்குள் ஜம்மென்று நுழைந்து விட்டது இந்தியா. நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை அழகான ஆட்டத்தால் தோற்கடித்ததன் மூலம், பாகிஸ்தானுக்கு அரை இறுதிக்கான வாய்ப்பு முற்றிலும் பறி போய் விட்டது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மற்ற அணிகளை விட இந்தியா நேர்த்தியாக ஆடி வருகிறது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என சிறப்பாக விளையாடி வருகிறது. தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா, நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை சந்தித்து தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பீல்டிங்கை எடுத்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட் செய்து 233 ரன்களை எடுத்தது. இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார். 10 ஓவர்களை வீசிய அவர் வெறும் 36 ரன்களை மட்டுமே கொடுத்தார். பின்னர் 234 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்தத் தொடங்கிய இந்தியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அருமையான தொடகத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். பிரமாதமாக ஆடிய முதல்வர் முதல் போட்டியைப் போலவே சதம் போட்டார். 107 பந்துகளைச் சந்தித்த அவர் 102 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. அதேபோல ஹோரித் சர்மா 52 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த திணேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 51 ரன்களை அள்ளினார். இந்த நேர்த்தியான ஆட்டத்தால் 10 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் முதல் அணியாக நுழைந்தது. 2வது அணி யார்… ஜூன் 14ம் தேதி கார்டிப்பில் தென் ஆப்பிரிக்காவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி 2வது அணியாக பி பிரிவிலிருந்து அரை இறுதிக்குள் புகும். பாகிஸ்தான் வாய்ப்பிழந்தது பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதிக்கான வாய்ப்பு சுத்தமாக மங்கிப் போய் விட்டது. அது 2 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. இன்னும் ஒரே ஒரு போட்டிதான் உள்ளது. அதுவும் இந்தியாவுடன். அதில் அந்த அணி வென்றாலும் புண்ணியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook