திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா 2022

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா 2022

பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்த ஆண்டு பூக்குழி இறங்குதல் மற்றும் அங்கப்பிரதட்சணம் ஆகிய நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன. பரம்பரை அறங்காவலர் தகவல்

பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு கோயில் வளாகத்திலேயே திருவிழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் கொரானா நெறிமுறைகள் படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் கோவிலுக்குள் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நாளை (27.01.22) பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது
வழக்கமாக பூச்செரிதல் விழாவிற்கு அடுத்த நாள் பூத்தேர் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வரும். ஆனால் இந்த ஆண்டு பூத்தேர் செல்வதற்கு அனுமதி இல்லை. அதேபோல் கோவிலில் வணிக வளாகங்கள் ராட்டினம் கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. திங்கள் செவ்வாய் புதன் வியாழன் ஆகிய நான்கு தினங்களில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பக்தர்களின் நேர்த்திக் கடன்களில் அங்கப்பிரதட்சணம் செய்வது, கோவில் வளாகத்தில் உடல் பாகங்களில் மாவிளக்கு ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் கோவில் கொடி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றும் நேரம் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். கோவில் திறந்திருக்கும் நாட்களில் இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். வரும் ஞாயிற்றுக்கிழமை (30.1.22) சாமி சாட்டுதல் நிகழ்வு, (1.2.22)கொடியேற்றம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு கோவில் வளாகத்தில் 11.2.22ந்தேதி நடைபெற இருந்த பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வாக 12.2.22 அன்று தசாவதாரம், 13.2.22 அன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும். 14.2.22 அன்று ஊஞ்சல் உற்சவமும், 15.2.22
தெப்ப உற்சாகத்துடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவடையும். நிகழ்வுகள் அனைத்தும் அரசு வழிகாட்டு நெறிகளை பின்பற்றி நடைபெற உள்ளது. அதேபோல் ஆண்டு தோறும் மண்டகப்படிதரார்களின் உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு உற்சவர் வெளியே செல்ல அனுமதி இல்லாததால் சாமி உற்சவம் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அரசின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு முககவசம் சமூக இடைவெளியை பின்பற்றி முழு ஒத்துழைப்பு தந்து கோயில் வளாகத்திற்குள் வரவேண்டுமென கோவில் அறங்காவலர் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook