திண்டுக்கல்:அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பச்சை நிற ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ரேஷனில் வழங்கப்படுகிறது. வெள்ளை நிற ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அரிசி வழங்கப்படுவதில்லை.
சர்க்கரை அளவு கூடுதலாக வழங்கப்படுகிறது. பச்சை நிற ரேஷன் கார்டு உள்ளவர்கள் மட்டுமே இலவச பொருட்களான கிரைண்டர், மிக்சி, மின்விசிறி பெற தகுதியானவர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இனி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச பொருட்களை வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. முதற்கட்டமாக இலவச பொருட்கள் வழங்கப்பட்ட கிராமப்புறங்களில் விடுபட்ட ,வெள்ளை
நிற ரேஷன்கார்டுதாரர்கள் பட்டியல் தயாரிக்க
கேட்டுக்கொள்ளப்
பட்டுள்ளது. புதிதாக வழங்க உள்ள பகுதிகளில் பச்சை, வெள்ளை நிற ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்குள் பெரும்பாலான இடங்களில் இலவச பொருட்களை கொடுத்து முடிக்கும் வகையில் பணிகள் நடக்கிறது.
பெரும்பாலான மாவட்டங்களில் கிராமப்புறங்களில் இலவச பொருட்கள் வழங்கி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது
நகராட்சி பகுதிகளில் வார்டுவாரியாக இலவச பொருட்கள் வழங்கும் பணிக்காக பட்டியல் தயாரிக்கப்படுகிறது.