தினமலர் டி.இ.டி., தேர்வு பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் நாளை நடக்கிறது

திண்டுக்கல்:கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கான, டி.இ.டி., தேர்வு பயிற்சி முகாம் தினமலர் சார்பில், திண்டுக்கல்லில் நாளை (ஜூன் 22) நடக்கிறது.
கல்வித்துறையில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின், டி.இ.டி., தேர்வு (டீச்சர்ஸ் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) மூலம் நடக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள இத்தேர்வுக்கு, ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில், நாளை திண்டுக்கல் ரவுண்ட்ரோடு, நாயுடு திருமண மண்டபத்தில் பயிற்சி முகாமை, தினமலர் நாளிதழ் நடத்துகிறது. காலை 10.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்படும். அனுமதி இலவசம்.10 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
சூப்பர் டிப்ஸ்: முகாமில், கல்வித்துறை நிபுணர்களின் “சூப்பர் டிப்ஸ்’ ஆலோசனையாக வழங்கப்படும். தமிழ் வினாக்கள் குறித்து, மதுரை திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி உதவியாளர் கணேசன், ஆங்கிலம் குறித்து, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக அதிகாரி வெங்கடாசலபதி, கணிதம், சூழ்நிலையியல் அறிவியல், வரலாறு, புவியியல், பொரு ளாதார வினாக்கள் குறித்து, அதே இன்ஸ்டிடியூட்டின் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம், குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் குறித்து, வேலம்மாள் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பிரகாஷ் ஆலோசனை வழங்குவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook