’யா.. யா’ படத்தில் பவர்ஸ்டார்

’யா.. யா’ படத்தில் பவர்ஸ்டார்

தில்லு முல்லு வெற்றியைத் தொடர்ந்து மிர்ச்சி சிவா நடித்து வரும் திரைப்படம் யா யா. இந்தப் படத்தை ஐ,.ராஜசேகர் இயக்குகிறார்.
இவர் எஸ்.ஏ.சந்திர சேகர், எம்.ராஜேஷ் போன்றோரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். அதோடு மட்டுமின்றி நடிகர் விஷால் மானேஜராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். எம்டன் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார். படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சந்தானம் வருகிறார். காமெடி கலந்த காதல் கதையாக தயாராகிறது. ஆரம்பத்தில் ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் நடிப்பதாக கமிட் செய்து அட்வான்செல்லாம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் சீனிவாசன் தற்போது வேலூர் ஜெயிலில் இருப்பதால் கதையிலும் அவர் ’திடீரென ஜெயில்லுக்கு’ போனது மாதிரி காட்சி வைத்து விட்டார்களாம்.
இந்தப்படத்துல ஒரு யூரோப்பியன் மாடல் கேரக்டரில் வருகிறார் பவர் ஸ்டார். மாடலிங்ல அவர் கலக்கியிருக்காராம். மேலும் படத்தின் டைட்டில் கார்டில் கூட பவர்ஸ்டார் பெயரை போட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook