இணையதளம் மூலம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமின்றி, எருமை, பசு மாடுகளின் விற்பனையும் நடந்து வருகிறது.
இணையதளங்களின் வருகையால் மனிதர்களின் உலகம் சுருங்கிவிட்டது. வங்கியில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை முதல் பள்ளிக் கட்டணம் செலுத்துவது வரை, அனைத்து வேலைகளையும் இணைய தளம் மூலம், வீட்டிலிருந்தே செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
வீட்டுத் தேவை பொருட்கள் கட்டில், பீரோ, பழைய, புதிய கம்ப்யூட்டர், வாகனங்கள் போன்றவற்றையும், ஆன்லைன், ஷாப்பிங் மூலம் வாங்க முடிகிறது. அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்கள், ஆன்-லைன் வர்த்தகம் மூலம் வாங்கப்பட்ட நிலையில், எருமை மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து இணையதளத்தின் மூலம், மாடுகளை விற்பனை செய்யும் ஒருவர், ’’ஆன்-லைனில், ஆடு, மாடுகள் விற்பனை, சமீப காலமாகத் தான் துவங்கியுள்ளது. நகர் புறங்களில் மட்டுமே, இத்தகைய விற்பனை நடந்த நிலையில், பீகார், ராஜஸ்தான், ஒடிசா, கேரளா போன்ற சில மாநிலங்களில் கிராமப்புற விவசாயி களும், இணையதளத்தின் மூலம், கால்நடைகளை விற்பனை செய்கின்றனர்.
ஏராளமான வாடிக்கையாளர்கள், இணையதளம் மூலம், அவற்றை வாங்குகின்றனர். மேலும், மாட்டின் கழிவுகளும் விற்பனை செய்யப்படுகின்றன’’என்று தெரிவித்தார்.