ஜூலை 15 முதல் தந்திக்கு “தடா’

ஜூலை 15 முதல் தந்திக்கு “தடா’

விடை பெறுகிறது 160 ஆண்டு சேவை
இணையதளம்:தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.கடந்த, 1853ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான இந்த வசதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் பரிமாற்றத்திற்கு, பலராலும் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றாக இருந்தது.சில ஆண்டுகளாக, குறைந்த கட்டணத்தில், போன் மூலம் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வசதி, “இ – மெயில்’ மூலம் விரிவான தகவல் களை அனுப்புதல் போன்றவற்றை, அனைத்து தரப்பினரும் பின்பற்ற துவங்கியதை அடுத்து, தந்தி பயன்பாடு, வெகுவாக குறைந்து விட்டது.

கடந்த, 160 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள இந்த சேவை, இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது.அஞ்சல் துறையின் சார்பில் வழங்கப்பட்ட இந்த சேவை, கடந்த சில ஆண்டுகளாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. வணிகரீதியில், லாபம் தராத இந்த சேவையை, ஜூலை, 15 முதல் நிறுத்திக் கொள்ள, பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது.இது குறித்து, மத்திய அரசிடம், அந்த நிறுவனம் அனுமதி கோரிய போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனமே முடிவெடுக்கலாம் என, அரசு கூறிவிட்டது.

சுற்றறிக்கை:

இதையடுத்து, ஜூலை, 15ம் தேதி முதல், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தந்தி இருக்காது. அடுத்த, ஆறு மாதங்களுக்கு, அரசின் ஆணைகள், சுற்றறிக்கைகள் மட்டுமே, தந்தி சேவை மூலம் அளிக்கப்படும். அதன் பிறகு, முழுமையாக, தந்தி சேவை நிறுத்தப்படும் என, டில்லியில் உள்ள, பி.எஸ்.என்.எல்., நிறுவன, மூத்த பொது மேலாளர், சமீம் அக்தர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook