மிகப்பெரிய வணிக வளாகங்களுக்குள் நாம் நுழையும் போது நுழைவாயிலில் படத்தில் உள்ளது போல ஒரு சாதனம் இருக்கும். அதை நாம் ஏசி என்று நினைத்திருப்போம். ஆனால்அதன் பெயர் Air Door என்று குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து காற்று தொடர்ந்து செங்குத்தாக கீழ்நோக்கி வெளியிடப்படும்.
இதற்கான உண்மையான பயன்பாடு என்ன வென்றால் வெளியிருக்கும் வெப்பக்காற்று, புகை, தூசி போன்றவை கட்டிடத்திற்குள் வராமலும் உள்ளே இருக்கும் குளிர்ந்த காற்று கட்டிடத்திற்கு வெளியே செல்லாமல் தடுத்து கட்டிடத்தின் சராசரி வெப்பநிலையை தக்க வைப்பதாகும்.
மேலும் சிறு சிறு பூச்சிகள் போன்றவை கட்டிடத்திற்குள் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.