பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கு மாசடைந்த காற்று மூலம் மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சர்வதேச ஆய்வுமூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் மட்டும் காற்று மாசு காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பு அளவை விட ஐக்கிய ராஜ்ஜியத்தின் பல நகரங்களின் காற்று மண்டலத்தில் மாசு அதிகமாக இருப்பதாக லான்செட் நடத்திய இந்த ஆய்வுக்கு உதவு செய்த பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.