மதுக்குடித்த 115 குழந்தைகள்; இந்தியாவில் தான்

மதுக்குடித்த 115 குழந்தைகள்; இந்தியாவில் தான்

குர்கான்: இந்தியாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு குடிக்க மது வழங்கிய பப் ( கேளிக்கை விடுதி ) மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர் கைது செய்யப்படாமல் விடப்பட்டார். மேலும் அங்கிருந்த மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது எல்லாம் நமது இந்தியாவில் தான் நடந்திருக்கிறது என்பது சற்று ஆச்சரியமாக இருக்கும் அதே நேரத்தில் மிக அதிர்ச்சியான விஷயமும் கூட.
அரியானா மாநிலம் குர்கானில் முக்கிய வீதியில் ஒரு ஷாப்பிங்மால் உள்ளது. இங்கு ஒரு கேளிக்கை விடுதியில் சிறுவர்களும் மது அருந்துவதாக, கலால் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையிட்டனர். இந்நேரத்தில் அங்கு 100 க்கும் மேற்பட்ட சிறார்கள் மது அருந்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அனைவரும் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்களே ! மொத்தம் 115 சிறுவர்கள் இருந்தனர். இவர்களை மீட்டு அறிவுரை வழங்கப்பட்டது.

மது வகைள், புகை ஊது குழல் :

இங்கிருந்து உயர்ரக மது வகைள், புகை ஊது குழல் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறையினர் கூறினர். மேலும் குடிப்பதற்கென வயது வரம்பு 25 ஆகும். ஆனால் இங்கு சிறார்கள் குடித்துள்ளனர், இது மிக கவலை தரும் விஷயம் ஆகும். மேலும் இந்த சிறார்களின் எதிர்காலத்தை சீரழிக்கப்படுகிறது என சுங்க துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குழந்தைகள் மற்றும் பப் நடத்தியவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பப் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரியானாவில் ஏன் இந்தியாவில் இது போன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook