சூரியஒளிமின்சாரம்
சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றி மின்கலங்களில் சேமித்து வைப்பது தான் சூரிய ஒளி மின்சாரம்.இன்றைய காலகட்டத்தில் மின்சாரத் தேவை அதிகமாக உள்ளது.பல வழிகளில் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம் அதில் இந்த சூரிய ஒளி மின்சாரம்.
ஏன் எனக்கு சூரிய ஒளி மின்சாரம் தேவை?
மின்சாரப் பயன்பாடு என்பது நாளுக்குநாள் இதன் தேவை அதிகமாக உள்ளது.நம்வீட்டில்light, fan,, grinder, mixy, iron box, cell phone , motor tv,bridge, washing machine, Ac, computer,…etc என பல மின்சார பயன்பாட்டுக் சாதனங்கள் அதிகமாக உள்ளது இதனால் நம் மின்சாரக்கட்டணம் உயர்ந்து வருகிறது.நாட்டில் மின் தேவையை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது இதை எல்லாம் அறிந்து உங்கள் வீட்டிற்கான மின்சாரத்தை நீங்களே தயார் செய்ய முடியும்அது தான் இந்த சூரிய ஒளி மின்சாரம் சூரிய தகட்டின் (solar panel)மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.இதனால் நீங்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
சூரியதகடு (solar panel)
சூரிய தகட்டை பயன்படுத்தி சூரிய ஒளி மின்சாரம் எளிதாக தயார் செய்யமுடியும்.சோலார் தகட்டில் சூரிய ஒளியை கிரகித்து அதில்உள்ள ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக இந்த தகடு மாற்றி கொடுக்கும்.இந்தசெயல்முறை எல்லா இடங்களிலும் நாம் சரியாக பயன்படுத்த முடியும்.அரசும் சில தனியார் நிறுவனங்களும் பெரிய மலைகளில் காடுகளில் இந்த தகட்டை பயன்படுத்தி மின்சாரம் தயாரிகின்றன.
வீட்டில் சூரிய தகட்டின் மின்சாரம்
வீட்டில் எளிதாக இந்த சோலார் தகட்டை நம் வீட்டு மாடியிலோ இல்லை வாசலில் பந்தல் மேற் கூரையிலோ இந்த சோலார்தகட்டை அடுக்கி மின்சாரம் தாயரிக்க முடியும்.சுய தயாரிப்பை நாம் நம்முள் கொண்டுவரமுடியும்.மின்கட்டணமில்லா சூழலை நாம் உருவாக்கமுடியும்.
பயன்பாடுகள்
1.மின் கட்டணம் கட்டவேண்டியதில்லை
2.அதிகமின்சாரத்தை தயாரிக்க முடியும்
3.தானியங்கி பொருட்களை உருவக்க முடியும்
4.மின்சாரம் இல்லாத இடங்களிலும் மின்சாரம் தயாரிக்க முடியும்
5.சிறு குறு தொழில்கள் வளர்ச்சி அடையும்
6.வீட்டின் பொருளாதார மேம்பாடு வளர்ச்சி அடையும்
7.விவசாயம் சார்ந்த வேலைகளுக்கு அதிக பயன் தரும் இந்த சோலார் மின்சாரம்.
தனியார் சூரிய தகடு தொழிற்சாலை
மின்சாரத்தை தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலைகள் நம் நாட்டில் பல இடங்களில் தொழில்நுட்ப உதவியுடன் இயங்கிவருகின்றன.இதனால் நாட்டின் மின் தேவை நாம் எளிதக சமாளிக்க முடியும். வேலை வாய்ப்புகள் பெருகும்.நாட்டின் மின்தேவையை மட்டுமின்றி போருளாதார வளர்ச்சிக்கும் இந்த சோலார் மின்சாரம் உறுதுணையாக இருக்கும்.எதிர்காலத்தில் சோலார் தகட்டை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன .நம் நாட்டில் உள்ள அனைத்து வகையானதொழிற்சாலை சோலார் தகட்டின் உள்ள மின் சக்தியில் இயங்கும்.
சோலார்தயாரிப்புகள்நடைமுறைக்குசாத்தியாம?
உதாரணமாக நாம் நம் வீட்டிற்க்கு முன்பு அதாவது வெளியில் ஒரு விளக்கு அதை நீங்கள் சோலார் தகட்டை பொருத்தி எரிய செய்தால் இது சாத்தியாம் தான். இது போன்ற சின்ன சின்ன தயாரிப்புகள் நம் சோலார் தகட்டில் சாத்தியமாக்கிக்கொள்ளமுடியும்.
1.சிசி டிவி கேமரா
2.கால்கிலடர்கள்
3.விளையாட்டு பொருட்கள்
4.சோலார் அடுப்புகள்
5.பம்பு செட்டுகள்
6.தெரு விளக்குகள்
7.பில்லிங் இயந்திரங்கள் … etc
சோலார் பயன்பாட்டில் சீனா
உலகிலேயே சோலார் பயன்பாட்டில் சீனா முதலிடத்தில் உள்ளது பெரும்பாலான சீனா தயாரிப்புகள் சோலாரில்தான் தயாரிகின்றன.பின்பு ஏற்றுமதிசெய்கின்றன.சீனாவில் ஒரு சில இடங்களில் சோலார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் தெரு விளக்குகள் முதல் அரசு விழாக்கள் வரை சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றன.
சோலார் பயன்பாட்டில் ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய விடுகளில் கிட்டத்தட்ட 50% மக்கள் சோலார் மேற்கூரை பயன்படுத்துகிறார்கள்.பின்பு வாகனகள் ,மிதிவண்டிகள் போன்றவை சோலார் தயாரிப்புகள்.