Best Natural Products [organic Foods] in Dindigul

Best Natural Products [organic Foods] in Dindigul

இயற்கை இயற்கை சார்ந்த உணவுகள் (organic Foods)

     இரசாயன கலப்படம் இல்லாத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட மற்றும் வளர்க்கப்பட்டஉணவுகள் ஆர்கானிக் உணவுகள் என்கிறோம்.ஊட்டசத்து குறைபாடுகளை நாம் இந்த இயற்கை உணவிகளில் நாம் சரி செய்து கொள்ளலாம்.

இரசாயன உணவுகள்எப்படிநம் உணவு பட்டியலில் வந்தது ?

     நாம் நம் வாழ்க்கை முறைகளை உணவு உடை  என10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறிக்கொண்டே வருகிறது. நம் முன்னோர்கள் இயற்கையான உணவுகளை உட்கொண்டர்கள் 100 வயது வரை ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்தார்கள்.உடல் ரீதியான பிரச்சனைகளும் மன ரீதியான பிரசைகளும் அவர்களுக்கு வந்தது இல்லை.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் பணத்தை சம்பாதிக்க பல வழிகளில் வேகமாக பயணிக்கிறோம் அந்த வேகத்தில் இந்த உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.இப்படி இருக்க உணவின் தேவை அதிகமாக அதிகமாக உற்பத்தி நேரமும் அதிகரிக்க தொடங்கியது இதனால் பற்றாக்குறை அதிகரிக்க தொடங்கியது இந்த நிலைமை சமாளிக்க விரைவில் விளைச்சல் தரக்கூடிய இரசாயனங்களை கலந்து உற்பத்தி நேரத்தை குறைத்தார்கள்.

இதனால் பற்றக்குறை குறைந்தது உற்பத்தியாளர்களுக்கு இலாபம் அதிகரிக்க தொடங்கியது பின்பு நமக்கும் நோய்கள் அதிகரிக்க தொடங்கியது சளி ,இருமல் தொடங்கி இன்று மாரடைப்பு புற்றுநோய் என பெரிய பெரிய நோய் நம்மை வந்து எளிதில் தாக்க கூடிய வகையில் நம் உணவு பழக்க வழக்கம் மாற தொடங்கியது.இப்படித்தான் நம் உணவு பட்டியலில் இந்த இரசாயன உணவுகள் வந்தது.

இயற்கை உணவா? வேண்டாம் சொல்றிங்களா முதலில் இத படிங்க

     இயற்கைஉணவில் ஆரோக்கியம் உள்ளது என்பதை நாம் நன்கு தெரிந்தும்கூட நாம் இரசாயனம் கலந்த உணவை நாம் அதிகம் உண்கிறோம் காரணம் ருசி அதிகமாக உள்ளது.அப்போ இயற்கை உணவுகளில் ருசி இல்லையா என்ற கேள்வி வருகிறது.கண்டிப்பாக இயற்கை உணவுகளில் ருசி அதிகமாகவே இருக்கும். நாம் சமைக்கும் போதும் எப்படி சமைக்கிறோம் என்பதிலிருந்து தான் ருசி அடங்கியிருகிறது.தவிர இயற்கை உணவில் ருசி இல்லை என்ற கூற்று தவறானது.”பச்சையாக உள்ளது” “மூலிகை வாசம் வீசுது” போன்ற வார்த்தைகளால் நாம் இயற்கை உணவை கொஞ்சம் தள்ளிய வைக்கின்றோம் இந்தநிலை மாற வேண்டும் மாற்ற வேண்டும் அது முதலில் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்.

இயற்கை உணவு பெயர்கள் உங்களுக்கு தெரியுமா (இரசாயனம் இல்லா)

1.எலுமிச்சை சாதம்

2.தேங்காய் சாதம்

3. கோதுமை ரவை இட்லி

4.அருகம்புல்ஜூஸ்

5.வல்லாரை ஜூஸ்

6எள்ளுசாதம்

7.மரவள்ளி கிழங்கு ஹல்வா

8.உளுந்து பொடி சாதம்

9.உளுந்தங் கூழ்

1௦.வாழை தண்டு கிச்சடி …etc

மேற்கண்ட உணவுகள் நாம் இயற்கை சார்ந்த மூலப்பொருள்களை நாம் சமைத்து சாப்பிடலாம்.

உணவே மருந்து  மருந்தே உணவு

      நமக்கு நாம் முனோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்ற கூற்று நம் தமிழ் நாட்டில் உண்டு.காலங்கள் கடந்தாலும் நாம் நவீன உலகத்தில் இருந்தாலும் ஆரோக்கியமான உணவு தான் நமக்கு நல்லது என்ற விழிப்புணர்வு நம்மிடம் வரத் தொடங்கியது.பூச்சிமருந்து மற்றும் இராசாயனம் கலந்த காய்கறிகள் பழங்கள் விதைகள் போன்றவற்றை பயன்படுத்துவது தவறு என்ற எண்ணம் நம்மிடம் வர தொடங்கியது.இது ஒரு நல்ல தொடக்கம்.நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் நம் நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் வராமல் இருக்க நான் என்ன சாப்பிடனும் ?

     இயற்கைகாய்கறிகள்,கீரை வகைகள் ,முட்டை,நெத்திலி மீன் ,மத்தி மீன் போன்றவை நாம் வழக்கமாக எடுத்துகொண்டால் நம் சர்க்கரை நோய்;இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.பொதுவாகவே கொழுப்பு நிறைந்த மாமிசத்தை நாம் அதிகமாக உட்கொண்டால் நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது அல்லதுதினமும் உடற்பயிற்சி செய்தால் நமக்குசர்க்கரை நோய் வருவதற்குவாய்ப்பு இல்லை.

Best Natural Products in Dindigul

      திண்டுக்கலில் இயற்கையாக கிடைக்கும் சிறுமலை வாழைபழம் சிறுமலை பாலபழம் ,சிறுமலை தேன்,அவகோடா பழம்,பேரிக்காய்,பூக்கள்போன்றவை மிகவும் உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் குறிப்பாக இந்த சிறுமலை வாழைப்பழம் வயுற்றை சுத்தம் செய்து செரிமான சக்தியை அதிகரிக்கும்.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊர்களில் எதாவது சிறப்பு உண்டு அதாவது இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்கள்,காய்கறிகள்,கீரைகள் எனஇயற்கை தந்த பரிசை நாம் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook