தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களில் சென்னைவாசிகள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனராம். தேசிய குற்றப்பிரிவு ஆவணத்தின் அறிக்கையின் படி 2012ம் ஆண்டு இந்திய அளவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் தென்மாநிலங்களில் வசிப்பவர்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல், தேர்வில் தோல்வி போன்ற காரணங்களினால் தமிழ்நாட்டில் அதிக அளவில் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.