குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்…சர்வே சொல்கிறது…

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்…சர்வே சொல்கிறது…

குடிப்பழக்கம் மற்றும் இன்னபிற போதைப்பழக்கங்களை உடையவர்களைவிடவும் ஃபேஸ்புக்கில் ஐக்கியமானவர்கள் மிகவும் பலகீனமானவர்களாக உள்ளனர் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

யுனிவர்சிட்டி ஆப் மிசோரி சார்பில் 225 கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மது அருந்துவதைவிட ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவதே மிகுந்த ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் விரும்பும் 20 டெக் நிறுவனங்கள்…

மேலும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மனித மூளைகள் நேரத்தை செலவிடுவதால், உடல் சோர்வு, பலவீனமான மனநிலையையும் பெற்றுத்தரும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இம்மாதிரி தளங்களில் அதிக அளவில் கவனம்செலுத்துவதை குறைக்கவேண்டும் எனவும், சிறுவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது நன்மைதரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook