ஓர் அதிசயக் கிராமம்!

ஓர் அதிசயக் கிராமம்!

ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகின்றார்கள். வேறெங்குமில்லை ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமுன்ட் மாவட்டத்தில் தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

நெல்லும் கள்ளிபாலும் கொடுத்து பெண் சிசுவை மண்ணுக்கு தானமாக்கும் அரக்கர் மத்தியில் கடந்த சில வருடங்களாக பிப்லான்ட்ரி கிராமத்தில் பஞ்சாயத்தினர் ஒன்று கூடி இவ்வாறான நற்செயலில் ஈடுபடுகிறார்கள்.

கடந்த ஆறு வருடங்களில் இரண்டரை லட்சம் வேம்பு ,சீசேம் ,நெல்லிக்காய் /மா மரங்களை நட்டிருக்கிறார்கள். இந்தப் புண்ணிய காரியத்தைத் துவக்கி வைத்தவர் ஷ்யாம் சுந்தர் பலிவால் அவரது மகளின் இறப்புக்கு பின்னர் இப்படி மரம் நடுவதை ஆரம்பித்திருக்கிறார் .

இக்கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60 பெண் குழந்தைகள் பிறக்கின்றன. பிறக்கும் குழந்தைக்கு ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பித்து அதில் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட தொகையப் போட்டு வைக்கிறார்கள். அப்பெண் 20 வயதானதும் அந்தச் சேமிப்பை எடுக்கலாம். அதுவரை அப்பெண் பெயரில் நட்டு வைத்த மரத்தையும் பராமரிக்க வேண்டும். அதற்கு முன்பு பால்ய விவாகம் செய்யக்கூடாது. திருமண வயது வரை காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பெற்றோரிடமிருந்து கையொப்பம் பெறப்படுகிறது.

மேலும் ஒருவர் இறக்கும்போதும் அவர் நினைவில் பதினோரு மரங்களை நடுகின்றார்கள். இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை 8000 பேர். மரம் நடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், மரங்களைக் கரையான் அரிக்காமல் இருக்க கற்றாழையை நடவு செய்துள்ளார்கள். மரத்துக்கு பாதுகாப்பும் கொடுக்கிறது, அதில் ஜூஸ் /ஜெல் /ஊறுகாய் காஸ்மாடிக்ஸ் என்று தயாரித்தும் காசு பார்க்கிறார்கள்.

முக்கியமான விஷயம் கடந்த ஏழெட்டு வருடங்களாக இந்தக் கிராமத்தில் கிரிமினல் கேஸ் இல்லையாம். சோம பானம் சுராபானம், கள் போன்றவை கிராமத்திற்குள் வருவதில்லையாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook