இன்று மனிதன் நிலவில் காலடி வைத்த தினம்

இன்று மனிதன் நிலவில் காலடி வைத்த தினம்

இன்று மனிதன், நிலவில் காலடி வைத்த தினம் (ஜூலை 20), 44 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், முதன்முதலாக நிலவில் மனிதன் காலடி பதித்தான். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969, ஜூலை 16ம் தேதி அப்பலோ 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர். இந்த விண்கலம் ஜூலை 20ம் தேதி இரவு 8.17 மணிக்கு நிலவில் இறங்கியது. விண்கலத்தில் பயணம் செய்த மூன்று வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் முதலில் காலடி வைத்தார். இதன் அடையாளமாக, அமெரிக்காவின் தேசியக் கொடியையும் நிலவில் பறக்க விட்டார். நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற சாதனையும் படைத்தார். சமீபத்தில் இவர் மறைந்தார்.

ரஷ்யாவா ! அமெரிக்காவா!

உலகில் முதன்முதலாக, 1957 அக்., 4ல் மனிதன் இல்லாத,”ஸ்புட்னிக் 1′ எனும் செயற்கைக்கோளை சோவியத் யூனியன் விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இதன்பின் 1958ல் அமெரிக்கா, முதல் செயற்கைக்கோளான எக்ஸ்புளோரர் 1யை விண்ணுக்கு அனுப்பியது. சோவியத் யூனியனுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பனிப்போரின் விளைவாக, இரு நாடுகளும் பலத்தை நிரூபிக்கும் விதமாக, போட்டி போட்டு செயற்கைக்கோள்களை அனுப்பின. இறுதியில் 1969ல் அமெரிக்கா, நிலவுக்கு மனிதனை அனுப்பி, சாதனை மைல்கல்லில் தனி இடம் பிடித்தது.

யார் இந்த 3 பேர்:

அப்பபோலோ விண்கலத்தை தயாரிப்பதற்கு ஆன செலவு “20 பில்லியன்’ டாலர். இதை உருவாக்குவதற்கு 6 ஆண்டுகள் ஆனது. 195 மணி, 18 நிமிடம், 35 வினாடிகள் இதன் பயணம் நீடித்தது. 8 நாட்களுக்குப் பின், ஜூலை 24ல் கொலம்பியாவில் விண்கலம் தரை இறங்கியது. விண்வெளியில் வீரர்கள் தங்களின் உணவுக்கு பாகர் (பன்றி இறைச்சி), சுகர் குக்கீஸ், பைன் ஆப்பிள் மற்றும் திராட்சை ஜூஸ் மற்றும் காபி ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர்.

விண்வெளி வீரர்கள்

* நீல் ஆம்ஸ்ட்ராங் 1930, ஆக. 5ல் பிறந்தார். பி.எஸ்., (ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்) , எம்.எஸ்., (ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்) படித்தவர். 2012 ஆக., 25ல் மறைந்தார்.

* எட்வின் ஆல்ட்ரின் 1930, ஜன. 20ல் பிறந்தார். இவரும் பி.எஸ்., பட்டதாரி. நிலவில் இறங்கிய இரண்டாவது மனிதன் என்ற பெருமை பெற்றவர்.

* மைக்கேல் காலியன்ஸ் 1930, அக்.,31ல் இத்தாலியில் பிறந்தார். இவரும் பி.எஸ்., பட்டதாரி. “அப்போலோ 11′ பயணத்துக்கு பின், அமெரிக்காவின் “நேஷனல் ஏர் அண்ட் ஸ்பேஸ் மியூசிய’த்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook