வேடசந்தூர் அருகே அனுமதி இன்றி வீட்டில் வெடி மருந்து பதுக்கி விற்பனை: வியாபாரி கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு போலீஸ் சரகம் நல்லூரை சேர்ந்தவர் குணசேகரன். (வயது 36). இவரது வீட்டில் அனுமதி இன்றி வெடி மருந்துகள் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் எரியோடு போலீசார் விரைந்து சென்று குணசேகரன் வீட்டை சோதனை போட்டனர். அப்போது அந்த வீட்டில் அவர் வெடி மருந்துகள் பதுக்கி விற்பனை செய்தது.கண்டு பிடிக்கப்பட்டது.

உடனே குணசேகரனை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் அந்த பகுதியில் உள்ள வாணவேடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு ஒட்டு மொத்தமாக அனுமதி இன்றி வெடிகள் சப்ளை செய்து உள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Be the first to comment on "வேடசந்தூர் அருகே அனுமதி இன்றி வீட்டில் வெடி மருந்து பதுக்கி விற்பனை: வியாபாரி கைது"

Leave a comment

Your email address will not be published.


Connect with Facebook

*