மெல்போர்ன்: 4 அணுகுண்டுகள் ஒரு சேர வெடித்தால் உண்டாகும் எப்பத்தின் அளவிற்கு பூமி தற்போது சூடாகி வருவதாக அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். பூமி வெப்பமயமாதல் குறித்து , ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான்குக் ஆய்வு செய்து வந்தார். அந்த ஆய்வில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பூமியின் வெப்பம் தற்போது அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
