நமக்கு எப்போதுமே பயணம் என்பது வாழ்க்கையின் ஒன்றாகி போன ஒரு முக்கியமான தேவை.
இதில் விமான பயணம் என்பது கொஞ்சம் கஷ்டம். காரணம்- நம் விமானத்தில் ஏறினாலும், நம் பெட்டிகள் மீண்டும் நம் கைக்கு வராமல் போனால் மிகுந்த பிரச்சினைதான்.
ஏன் என்றால் லோடிங் அன் லோடிங் என்பது ஏர்போர்ட் லாஜிஸ்டிக்கை பொறுத்த வரை ஒரு பெரிய கடலில் சிறு பொடி மீனை தேடுவது.
இதை மாற்றும் வண்ணம் ஏர் பஸ் நிறுவனம் ஒரு புது சூட் கேஸை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பெயர் “பேக் 2 கோ”.
இதன் மூலம் உங்கள் சூட் கேஸை செக்கின் செய்த உடன் உங்களது ஸ்மார்ட் ஃபோனில் உடனே டிராக் செய்து கொள்ளலாம்.
அடுத்து விமானத்தில் ஏறும்போது கூட உங்கள் சூட் கேஸ் லோடிங் ஆகிவிட்டதா என பார்க்கலாம்.
பின்னர் லேன்டிங் ஆன பிறகும் டிராக் செய்து அது யாராவது எடுக்கிறார்களா என கூட லைவாக பார்க்க முடியும்.
இதனால் உங்கள் சூட் கேஸ் உங்கள் கையில்..