அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மாலத்தீவில் உள்ள அரசியல் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை அதிகரிப்பது, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உயர்த்துவது உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசிக்கொண்டது நடப்பு ஆண்டு இதுதான் முதல் தடவையாகும். மோடி-டிரம்ப் தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- “மாலத்தீவில் தற்போது உள்ள அரசியல் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் கவலை வெளிப்படுத்தினர். மாலத்தீவில் ஜனநாயக அமைப்புகளுக்கு மதிப்பு அளிக்கப்படுவதன் முக்கியத்தும் பற்றியும் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[amazon_link asins=’B00K6DHF0O,B078PFSXJ8,B077D4LYQB,B01N4O8AWS,B01AL1BRMM,B079DTVQRG,B078XBM1P9,B0794WQJL6,B01N5LJZNI’ template=’ProductCarousel’ store=’dindigul-21′ marketplace=’IN’ link_id=’1410e2a7-0d6c-11e8-8ea2-5703ce600cfb’]
மியான்மர் விவகாரம் குறித்தும் ரோகிங்கியா அகதிகளின் நிலைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்துக்கொண்டனர் எனவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
source:www.dailythanthi.com