வாஷிங்டன்: பழங்கள், காய்கறிகளை ஜூஸ் போட்டு ஆவலுடன் குடிப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி 2 லிட்டர் மனித ரத்தத்தை ஜூஸ் போல குடிக்கிறார். அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில்தான் நடைபெற்றுவருகிறது. ரத்தம் குடிக்கும் இந்தப் பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனவாம். ரத்தப் பிரியையான அந்தப் பெண்ணின் பெயர் ஜூலியா கேப்லஸ் (45). இவரது கணவர் டொனால்டு லாசரோவிச். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசித்து வரும் இவர்களுக்கு 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அரில் (24) என்ற மகளும், அலெக்ஸ் என்ற மகனும் உள்ளார்.
‘மனித ரத்தத்தில் ஏராளமான சத்துக்கள் இருப்பது எனக்கு தெரியும். தினமும் ரத்தம் குடிப்பதால் நான் மிகவும் வலிமையாக, ஆரோக்கியமாக உள்ளேன். இதனால் நோய் தாக்குதலுக்கு உட்படாமல் அழகாக இருக்கிறேன்’ என்கிறார் ஜூலியா. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ருசி பிடிச்சிருக்கு போல.