பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 15 லட்சத்து 82 ஆயிரத்து 130 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 72 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில் உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 652 கிராம், வெள்ளி 11 கிலோ (11,202 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.