நாம் தினசரி படிக்கும் செய்தித்தாளில் ஒரு குறிப்பிட்ட அணையிலிருந்து குறிப்பிட்ட அளவு TMC தண்ணீர் திறக்கப்படுகிறது என்று படித்திருப்போம்
உண்மையில் TMC என்றால் 1000 Million Cubic Feet என்பதாகும். இதை சுருக்கமாக TMC என்றுஅழைக்கிறார்கள்.தெளிவாக சொல்ல வேண்டுமெனில் 100 கோடிகனஅடிநீர்ஆகும்.
1 கனஅடி – 28.3 லிட்டர்
1 TMC – 2830 கோடிலிட்டர்
உதாரணமாக
1 TMC தண்ணீரை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம்.