பாக்தாத்: தன்னை விட 70 வயது குறைவான பெண்ணை மணந்த 92 வயது ஈராக் முதியவர், இத்திருமணம் மூலம் தான் 20 வயது இளைஞனாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார். ஈராக் , பாக்தாத் அருகில் உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்த முசாலி முகம்மது அல்-முஜ்மாயிக்கு தற்போது வயது 92. விவசாயியான இவருக்கு 16 குழந்தைகள். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னதாக அவரது மனைவி மறைந்தார்.
இந்நிலையில் அவரது பேரன்கள் இருவருக்கு த்ஹிருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களோடு சேர்ந்து, முசாலியும் 22 வயதுள்ள இளம்பெண் ஒருவரை மணந்துள்ளார். இவர்கள் மூவரது திருமணமும் ஒரே மேடையில் நடை பெற்றது தான் வேடிக்கை. இந்த வித்தியாசமான திருமணாம், சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதில், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல் என்ற அனைத்து கேளிக்கை அம்சங்களுடனும் ஆடம்பரமாக அரங்கேறியது. திருமணம் குறித்து கருத்து தெரிவித்த முசாலி, ‘இத்திருமணத்தின் மூலம் நான் 20 வயது இளைஞனாக உணர்கிறேன்’ எனத் தெரிவித்து அப்பகுதி இளைஞர்களைக் கடுப்பேற்றியுள்ளார்.