அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் பில் வார்னர்(44). மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், பல அதிவேக பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.
2011ம் ஆண்டு 311 கி.மீட்டர் வேகத்தில் சென்று பரிசுக் கோப்பையை தட்டிச் சென்ற பில் வார்னர், மெய்னே மாவட்டத்தில் நேற்று நடந்த பந்தயத்தில் பங்கேற்றார்.
2011ம் ஆண்டு 311 கி.மீட்டர் வேகத்தில் சென்று பரிசுக் கோப்பையை தட்டிச் சென்ற பில் வார்னர், மெய்னே மாவட்டத்தில் நேற்று நடந்த பந்தயத்தில் பங்கேற்றார்.
பந்தயம் தொடங்கிய சில நிமிடங்களில் மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தை எட்டும் நோக்கத்தில் பந்தய தடத்தில் 285 கி.மீட்டர் வேகத்தில் அவர் பறந்த போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி சறுக்கியபடி தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் தூள்தூளாக நொறுங்கியது. பந்தயத்தை காண வந்த சுமார் 500 ரசிகர்கள் இந்த காட்சியை கண்டு பதற்றம் அடைந்தனர்.
சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் பில் வார்னருக்கு முதலுதவி அளித்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சில நிமிடங்களில் மரணம் அடைந்தார்.