திண்டுக்கல் : மானிய விலையில் ஸ்கூட்டர் பெற விண்ணப்பித்தவர்கள் விபரம் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்து தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி விரைவில் துவங்குகிறது.
பெண்களுக்கு 50 சதவீத மானிய விலையில் அரசு
ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய,, பேரூராட்சிகள், நகராட்சி,
மாநகாராட்சி அலுவலகங்களில் மகளிர் திட்ட பணியாளர்கள் பெறுகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரம் பெண்கள் ஓட்டுனர் உரிமம் கோரி பழகுனர் உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த உரிமம் பெறவும், ஆவணங்கள் தயார் செய்யவும் கால நீடிப்பு தேவை என்பதால் அரசு காலநீட்டிப்பு செய்துள்ளது. மாவட்ட அளவில் இதுவரை அனைத்து ஆவணங்களுடன் 2,800 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்கள் உடனுக்குடன் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்து தகுதியானவை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 2,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது மேலும் ஒருவாரத்திற்கு கால நீட்டிப்பு செய்துள்ளதால் இன்னும்
அதிகளவில் விண்ணப்பங்கள் குவியும்.
மாற்றுத்திறனாளிகள் பழகுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து இருந்தால் அதனை நேர்முக தேர்வின் போது சமர்ப்பிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் பழுகுநர் உரிமத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=1953828