10ம் தேதி முதல் எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கான விண்ணப்பங்கள்

10ம் தேதி முதல் எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கான விண்ணப்பங்கள்

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விரும்புவோருக்கு ஜுன் 10ம் தேதி முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

2013-2014-ஆம் கல்வியாண்டிற்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை 600025 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600006 கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பொறியியற் கல்லூரிகள் / கலைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் 10.6.2013 முதல் 29.6.2013 முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் பிற இனத்தவர் ரூ.300/-க்கான கேட்பு வரைவோலையினை (டிடி –  9.6.2013-க்கு பின் பெறப்படும் வகையில்)  “தி செகரட்ரி, தமிழ்நாடு எம்பிஏ / எம்சிஏ அட்மிஷன்ஸ் 2013 கவர்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோயம்பத்தூர் 641013”  என்ற பெயரில் கோயம்புத்தூரில் காசாக்கும் வகையில்  எடுத்து விண்ணப்பங்களை மேற்காணும் விற்பனை  மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல் (அருந்ததியர்), பட்டியல் / பழங்குடி (எஸ்சிஏ/எஸ்சி/எஸ்டி)  இனத்தவர் ரூ.150/-க்கான கேட்பு வரைவோலையினை சான்றிடப்பட்ட ஜாதிச் சான்றிதழின் நகலுடன் ஒப்படைத்து விண்ணப்பத்தினை மேற்காணும் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி  செய்யப்பட்ட  விண்ணப்பப்  படிவங்களை   ““தி செகரட்ரி, தமிழ்நாடு, எம்பிஏ / எம்சிஏ அட்மிஷன்ஸ் 2013, கவர்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோயம்பத்தூர் 641013” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.  விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29.6.2013.

எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2013 இரண்டாவது வாரத்தில் “அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூரில்” நடைபெறும்.  இதற்கான அறிவிப்பு உரியவர்கட்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் இடங்கள்

 

வரும் கல்வியாண்டில் எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேருவதற்கான  விண்ணப்பங்கள் வழங்கும் இடங்கள் பற்றிய விவரம் வருமாறு.

2013-2014-ஆம் கல்வியாண்டிற்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை 600025 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600006 கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பொறியியற் கல்லூரிகள் / கலைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள்  கீழ்க்காணும் பொறியியற் கல்லூரி / பாலிடெக்னிக் கல்லூரி / அரசு கலைக் கல்லூரிகளில் 10.6.2013 முதல் 29.6.2013 முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.

1. தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை 600025

2. மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை 600005

3. அரியலூர் அரசினர் கலைக் கல்லூரி, அரியலூர் 621 713

4. அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641 013

5. அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் 641 018

6. கடலூர் பெரியார் அரசினர் கலைக் கல்லூரி, கடலூர் 607001

7. தருமபுரி அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரி 636705

8. எம்.பி. முத்தையா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, திண்டுக்கல் 624008

9. பி.எஸ்.என்.ஏ. பொறியியற் கல்லூரி, திண்டுக்கல் 624622

10. இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோட் அண்டு டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி, ஈரோடு 638316

11. சிக்கையா நாயக்கர் கல்லூரி, வீரப்பன்சத்திரம், ஈரோடு

12. காஞ்சிபுரம் ராஜேஸ்வரி வேதாச்சலம் கலைக் கல்லூரி, செங்கல்பட்டு 603001

13. கன்னியாகுமரி எஸ்.டி. இந்து கல்லூரி, நாகர்கோவில் 629002

14. கரூர் அரசினர் கலைக் கல்லூரி, கரூர் 639005

15. கிருஷ்ணகிரி அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர் 635104

16. தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை 625020

17. ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, மதுரை 625002

18. தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை 625011

19. நாகப்பட்டிணம் தருமாபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, மயிலாடுதுறை 609001

20. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி (ஆடவர்), நாமக்கல்

21. பெரம்பலூர்  தந்தை ரோவர் பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பலூர் 621212

22. புதுக்கோட்டை எச்.எச். ராஜாஸ் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை 622001

23. இராமநாதபுரம் அரசினர் கலைக் கல்லூரி, பரமக்குடி 623707

24. அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் 636011

25. அரசினர் கலைக் கல்லூரி (ஆடவர்), சேலம் 636001

26. சிவகங்கை அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி, காரைக்குடி 630004

27. தஞ்சாவூர் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம் 612001

28. நீலகிரி அரசினர் கலைக் கல்லூரி, உதகமண்டலம் 643002

29. தேனி கம்மவார் சங்கம் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, தேனி மெயின் ரோடு, கொடுவிள்ளார்பட்டி அஞ்சல், தேனி 625531

30. திருவாரூர்  திரு.வி.க. அரசினர் கலைக் கல்லூரி, திருவாரூர் 613003

31. தூத்துக்குடி  அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி 628008

32. அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி 627007

33. செயிண்ட் சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை 627002

34. திருவள்ளூர் ஸ்ரீ சுப்பிரமணியசாமி அரசினர் கலைக் கல்லூரி, திருத்தணி

35. அரசினர் கலைக் கல்லூரி, திருவண்ணாமலை 606603

36. அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, செய்யாறு 604407

37. ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி 620020

38. செயிண்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி 620002

39. திருப்பூர் சிக்கண்ணா அரசினர் கலைக் கல்லூரி, திருப்பூர் 641602

40. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, விழுப்புரம் 605602

41. வேலூர் தந்தை பெரியார் பொறியியற் கல்லூரி, வேலூர் 632002

42. விருதுநகர் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி, விருதுநகர் 626001.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook