சென்னை : பி.எஸ்.எல்.வி, சி. 22 ராக்கெட்டின் அனைத்து கருவிகளும் சிறப்பாக இயங்குவதால் திட்டமிட்டபடி நேற்று இரவு 11.41 க்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி, சி. 22 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்,1 ஏ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீர், நிலம், ஆகாய மார்க்கங்களில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கலாம்.
ராக்கெட் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, கடந்த 29ம் தேதி காலை 7.11 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்கியது. பொதுவாக ராக்கெட்டுகள் பகல் நேரத்தில் செலுத்தப்படுவதுதான் வழக்கம். ஆனால் பி.எஸ்.எல்.வி, சி.22 ராக்கெட்டை பொறுத்தவரை இதில் பொருத்தப்பட்டுள்ள உந்துசக்தி பூஸ்டர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இரவில் செலுத்தப்பட்டது.