மாநிலம் முழுவதும் 82 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு

மாநிலம் முழுவதும் 82 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு

சென்னை: தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு, 82.02 லட்சம் பேர், வேலைக்காக காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில், நடப்பு ஆண்டு, ஜூன், 30ம் தேதி நிலவரப்படி, வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் பற்றிய விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 40.78 லட்சம் பெண்கள் உட்பட, மொத்தம், 82.02 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

இதில், பிற்படுத்தப்பட்டோர் – 34.40 லட்சம்; மிக பிற்படுத்தப்பட்டோர் – 18.90 லட்சம்; ஆதிதிராவிடர் – 18.32 லட்சம்; பழங்குடியினர் – 34,024 பேர் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு பிரிவின் கீழ், பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியோர் – 1,089; இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் – 2,416; மாற்றுத்திறனாளிகள் – 1,05,770 பேரும் உள்ளனர்.

பட்டதாரிகள் – 14.3 லட்சம்; முதுநிலை பட்டதாரிகள் – 6.09 லட்சம் பேரும் இப்பட்டியலில் உள்ளனர். இதில், 28 ஆயிரம் மருத்துவர்; 3.17 லட்சம் இன்ஜினியர்களும் அடங்குவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook