நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கடந்த 22 நாட்களாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி பிராத்தனை செய்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க பாராளுமன்ற சபாநாயகர் மேக்ஸ் சிசுலு, நேற்று பிரெட்டோரியா ஆஸ்பத்திரிக்கு சென்று நெல்சன் மண்டேலாவை பார்த்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேக்ஸ் சிசுலு, மண்டேலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தார்.
நாம் அவரை உயிருக்கு உயிராக நேசிக்கிறோம். நம்மை விட்டு அவர் பிரிந்துப் போவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.