திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படுமா?

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படுமா?

ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை, தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல் அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமுக நலத்துறை உள்பட 35-க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதையொட்டி அதிகமானோர் வருகின்றனர்.

அவ்வாறு வருவோர் குறித்து எவ்வித விவரமும் பதிவு செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் குறித்த தகவல்களை பதிவு செய்ய முடியும். வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒவ்வொரு வட்டத்திலிருந்தும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு அலுவலர் வீதம் கலந்துகொள்கின்றனர்.

ஆனால், எந்த துறைக்கு யார் வருகிறார்கள் என்ற விவரம் மாவட்ட நிர்வாகத்திற்கு முன்னதாக தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்களிடம் குழப்பம் ஏற்படுகிறது.

கடந்த வாரம் போலியான அடையாள அட்டையுடன் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஒருவர் பங்கேற்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.  கடந்த 6 மாதங்களாக அவர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இனிவரும் நாள்களில் கூட்டத்துக்கு வரும் அதிகாரிகள் கண்டிப்பாக தங்களின் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள் முறையாக சோதனையிடப்படுவதில்லை என்பதும் அதிகாரிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

விசாரணை மையம்

செயல்படுமா?

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் விசாரணை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மையம் செயல்படாமல் எப்போதும் பூட்டியே கிடக்கிறது.

இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், தாங்கள் பார்க்க வந்த அலுவலரையோ, சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தையோ தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது.

பிற அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய பாதை குறித்த விவரத்தை சுவரொட்டிகளாக தகவல் மையத்தின் அருகில் ஒட்டியுள்ளனர். ஆனால்,