இது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டார். அதன்படி வேடசந்தூர் ஆர்.டி.ஓ. விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் குஜிலியம்பாறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தனியார் பள்ளியில் இருந்து ஆம்னி வேன்களில் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 4 வேன்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பள்ளி வாகனம் போக்குவரத்திற்கான அனுமதி சான்று எதுவும் இல்லாததால் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி வேன்கள் குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் கூறுகையில் குஜிலியம்பாறை பகுதியில் இதுபோன்ற சோதனை தொடரும். அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.