திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்ட வருட ஏக்கமாக இருந்தது அரசு மருத்துவக்கல்லூரி. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது. திண்டுக்கல் அருகே உள்ள ஒடுக்கம் பகுதியில் ரூ.197 கோடி மதிப்பில் கட்டுமானப்பணிகள் தொடங்கியது
கல்லூரி வளாகத்தில் தரை தளம் மற்றும் 6 மாடி கட்டிடங்களுடன் கூடிய கல்லூரி தரைதளம், 2 மாடிகளுடன் கூடிய நிர்வாக அலுவலகம், வங்கி, தபால் நிலையம், பொறியியல் மற்றும் மின்னியல் துறைகளுக்கான அலுவலக கட்டிடம் ஆகியவையும் கட்டப்பட்டது.
மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தரைதளம் மற்றும் மாணவ& மாணவிக ளுக்கான வகுப்பறை கட்டிடம், நூலகம், ஆய்வகம், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கான குடியிருப்பு கல்லூரி அலுவலர்களுக்கான குடியிருப்பு ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன.
ஓர் அறையில் 3 மாணவர்கள் வீதம் 286 மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனித்தனியாக தங்குவதற்கான விடுதி வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.