தலையில் அடிபட்டு இளவரசன் சாவு: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

தலையில் அடிபட்டு இளவரசன் சாவு: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

தர்மபுரி:”இளவரசன், தலையில் அடிப்பட்டதால் உயிரிழந்தார்’ என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று இரவு, 10.30 மணிக்கு, இளவரசனின் தந்தை இளங்கோவிடம், எஸ்.பி., ஆஸ்ராகார்க், பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கினார்.

அறிக்கையில் கூறியிருப்பதாவது;இளவரசனின் உடல், விரைப்பான நிலையில் இருந்தது. அவரது உடல் திடகாத்திரமாக இருந்தது. இடது கை மணிக்கட்டு, உள்ளங்கைகளில், கிரீஸ் படிந்திருந்தது. கைகள், விரல்களில் சிராய்ப்புகள் இருந்தன. இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டு, கை வீக்கம் இருந்தது.தலையின் முன் பகுதி, மூக்குப் பகுதியில் சதை சிதைந்து இருந்தன. மூளை இரண்டு பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு வரப்பட்டிருந்தது. மூளையில் ஜல்லி துகள்கள் ஒட்டியிருந்தது. தலையில் பலத்த காயம் அடைந்ததால், இறப்பு ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை துவங்கிய நேரத்துக்கு முன், 12 மணி முதல், 24 மணி நேரத்துக்குள் இளவரசன் இறந்துள்ளார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இளவரசன் ரயிலில் அடிபட்டே உயிரிழந்துள்ளார் என, அரசு டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook