கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முது மொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வ மாகவும், மர பணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள் தான் இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வ குடிக ள் என்று நிரூபணமாகியு ள்ளன. மனித இனம் தோன் றுவதற்கு முன்பே பழங்கா லத்திலி ருந்து உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்றதொரு சூழல் தென்னகத்தில் நிலவியது என்பதற்கான அடுத்த ஒரு சான்றுதான் அரியலூர்.
அறிவியலாளர்கள் 460 கோடி ஆண்டுகட்கு முன் அண்டத்தின்வாயுக்கள் குளிர்ந்து தூசுப் படலமாகி, கணமா ன தூசுக்கள் தாது க்களாக பூமியின் மையத் திலும், லேசான துகள்கள் பூமியின் மேற்பரப் பில் பாறைகளாகப் படிந்து ஓடாக உருமாறி, பூமி உருவாக்கம் நிகழ்ந்ததாகக் கணித்துள்ள னர்.
பூமியில் பிராணவாயுப் படலம் ஒன்று சேர்ந்து ஓசோன் மண்டல ம் உருவானது 340 கோடி வருடங்களுக்கு முன் என்றும், அதன் பிறகு 283 கோடி ஆண்டுகள் கழித்தே உலகின் முதல் ஒரு செல் உயிரினம் 57 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலில் உருவாகியிருக் க முடியும் என்பது அறிவியலாளர்கள் கருத்தாக உள்ளது.
பூமியில் எந்த ஒரு ஜீவராசிகளு மற்ற 340 முதல் 57 கோடி ஆண் டுகள் வரையிலான இந்தக் கால கட்டத்தை பிரிகேம்ப்ரியன் யுகம் என்பார்கள்.
57 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முதல் உயிரினம் உருவான பிறகு இன்று வரையுள்ள காலத்தை அறிவியல் வல்லுனர்கள் பேலி யோசோயிக் (Palaeozoic), மீசாசோயிக் (Mesozoic), சீனோ சோயிக் (Cenozoic) என மூன்று யுகங்களாகப் பிரித்துள்ளனர்.
ஒரு செல் நுண்ணுயிரிகள் பல செல் உயிரினங்களாகிப் பின்னர் அவைகள் தாவரங்கள், பிராணி கள் எனப் பரிணாம வளர்ச்சி அடைந்தன. அதன் பயனாக 51 கோடி ஆண்டு களுக்கு முன்னர் உலகின் முதல் முதுகெலும்புள்ள பிராணி தோன்றி யது. உலகின் முதல் தாவர இனம் தோன்றியது 40 கோடி ஆண்டுகளு க்கு முன் னர் என்றும் உலகின் முதல் தரையில் வாழும் உயிரினம் தோன் றியது 37கோடி ஆண்டுகளு க்கு முன் என்றும் கணக்கிட்டு ள்ளனர்.
உயிரினங்களின் இந்த பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் யுகங்களை மேலும் பல சகாப்த ங்களாகப் பிரித்துள்ளனர். பேலி யோசோயிக் யுகத்தை கேம்பிரி யன், ஆர்டோவீசியன், சிலூரியன், டிவோனியன், கார்போனி ஃபெரஸ், பெர்மியன் என ஆறு சகாப்தங் களாகப் பிரித்துள்ளனர். இந்த யுகம் 57 முதல் 24.5 கோடி ஆண்டு களுக்கு முன்னர் வரை உள்ள கால கட்டமாகும்.
மீசாசோயிக் யுகம் 24.5 முதல் 6.5 கோடி ஆண்டுகள் வரையிலான 18 கோடி ஆண்டுகள் காலம் கொண் டது. டிரையாசிக், ஜுராசிக், கிரெ டேசியஸ் என மூன்று சகாப்தங்களா க இந்த யுகத்தைப் பிரித் துள்ளனர்.
சீனோசாயிக் யுகம் டெர்சியரி, குவாட்டனரி என இரண்டு சகாப்த ங்களைக் கொண்டது. இது 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கி இன்று வரையுள்ள காலகட்டமாகும்.
இதில் இக்கட்டுரையின் நாயகர்களா ன டைனோசர்கள் வாழ்ந்த காலம் ஜுராசிக் சகாப்தமாகும். இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த உயிரினங்க ளில் முக்கியமான இனம் டைனோ சர்கள். அவைகள் முட்டையிட்டு, குலம் வளர் த்த பெருமை கொண்டது தமிழகம் என்பது இப்போது அரியலூரில் நிரூபணமாகி இருக்கி றது.
மீசாசோயிக் யுகத்தின் மத்திய காலகட்டமான 20.8 முதல் 14.6 வரையிலான 6.2 கோடி ஆண்டுகள் காலம் ஜுராசிக் சகாப்தம் என ப்படுகிறது.
ஜுராசிக் சகாப்தத்தில் நம் பூமி எவ்வாறு இருந்திருக்கும்?
ஜூரசிக் சகாப்தத்தில் நம் பூமி மிக மிக இளமையான கிரகமா கத் திகழ்ந்துள்ளது. அப்போது பூமியில் ஒன்றாயிருந்த நிலப்பரப்பு, யூரேசியா, காண்ட்வானா எனப்பிரிந்து, பூமி ஓடு நகர்வால் மே லும் பல கண்டங்களாகப் பிரியத் தொடங்கிய காலம் அது. ஆல்ப்ஸ் மலையோ, இமய மலையோ அப்போது தோன்றியிருக்க வில்லை. தாவரங்களில் பாசிகள், பெரணிகள், ஊசி இலைத் தாவரங்கள், பனைக் குடும்பத்தைச் சேர்ந்த சில ஒற்றை விதை யிலைத் தாவரங்கள் மட்டுமே பூமியில் அப்போது தழைத்திருந் தன. பூக்கும் தாவரங்கள் கிடையாது. கடலில் முது கெலும்பற்ற ஜெல்லி, நட்சத்திர மீன் வகைகளும் கடல்பஞ்சு போன்ற உயிரி ன ங்களும் பல்கிப் பெருகியிருந்தன. முதுகெலும்புள்ள மீன்வகைகள், சுராமீன்கள் போன்றவைகளும் வாழ்ந்தன. நிலத்தில் வாழும் இனங்களில் ஊர்வன கோலோச்சி ய காலம் இது. டைனோசர்கள் பிரமாண்டமான பல்லியினத்தைச் சேர்ந்தவைகள் என்பதால் இவைகளுக்குக் காதுகள் கிடையாது. டைனோசர்கள் தவிர் த்து தவளைகள், முதலைகள், பல்லிகள், ஆமைகள் போன்றவை களும் அக்காலத்தில் நிலத்தில் வாழ்ந்துவந்தன. பின்னால் வந்த கிரெடே சியஸ் சகாப்தத்தில் தான் பற வை இனங்கள் டைனோசர் குடும்பத்திலி ருந்து பிரிந்து உருவான வை என்ப தால் ஜுராசிக் சகாப்தத்தில் பறவை இனங்கள் வாழ்ந்த சாத்தியமே கிடை யாது. அன்று உயிரோடிருந்த ஒரு சில சிறு பாலூட்டி இனங்கள் கூட இன்று அழிந்து விட்டன.
கடலை ஒட்டிய சதுப்பு நில பகுதிகளில்தான் உயிரினங்கள் வாழ் வதற்கு ஏதுவான மித வெப்ப சீதோஷ்ணம் நிலவியது. நிலப் பகுதியின் உட்புறம் மிகுந்த வெப்பமும் வறட்சியும் கொண்டதாக இருந்தது. அரியலூர் அருகில் இப்போது வெற்றுப் பாறையாக இருக்கும் இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் வற்றாத ஆறு ஓடி இருக்கிறது. நல்ல தண்ணீரோடு மிகப் பெரிய ஏரி இருந்திருக்கி றது. கடலும் மிக அருகாமையில் இருந்துள்ளது. எனவேதான் இங்கு டைனோசர்கள் பல்கிப் பெருகி பலகாலம் வாழ்ந்துள்ளன.
சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த அரியலூர் அருகில் செந்துரை என்னும் கிராமத்தில் 2 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து கிடக்கும் இந்த படிமபொக்கிஷம் டைனோசர்களின் வாழ்க்கை முறையையு ம் அது அழிந்த விதத்தையும் அறிய உதவும் என்கின்றனர் தொல் புவியியல் வல்லுனர்கள். ஆனால் இது இன்னும் சரிவரப் பாது காக்கப்படாத தால் இங்கிருந்து இந்த அரிய முட்டைகள் உள்ளூர் வாசிகளால் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதே போன்ற டைனோசர் படிம பிரதேசம் ஒன்று 1981ல் குஜராத் தில் கண்டறியப்பட்ட போது, அம்மாநில அரசு உடனடியாகச் செயல் பட்டு அதைப் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு ஒரு படிம அருங்காட்சியகம் உருவாக நடவடிக்கை எடுத் தது என்கி றார்கள் தொல் புவீயியல் வல்லுனர்கள். இப்பகுதியின் முக்கியத் துவம் கருதி, இப்பகுதிகளை ஒருங்கிணைத்து அதே போன்ற தொரு அருங்காட்சியகமும், ஆய்வகமும் செந்துரையில் அமைக் க உடனடி நடவடிக்கை அவசியம் என்கிறார்கள் உயிரின ஆராய்ச் சியாளர்கள். மத்திய அரசு உதவும்பட்சத்தில் இவற்றைச் செயல்படுத்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் முன் வந்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ராம் குமார் தலைமையிலான மாணவர் குழுவினர்தான் முதன் முதலில் அரியலூர் நகரை ஒட்டிய இப்பகுதியில் குவியல் குவிய லாய்ப் பல அடுக்குகளில் இருந்த டைனோசர் முட்டைப் படிம ங்கள், முட்டையிட்ட இடங்கள், டைனோசர் எலும்புகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துச் சேகரித்திருக்கிறார்கள்.
இங்கிருந்து சுமார் 60 டைனோசர் முட்டைகளை எடுத்திருக்கும்இந்தக்குழு, மேலும் ஆயிரக்கனக்கான முட்டைகள் படிமங்களாக இருப்பதை யும் கண்டறிந்துள்ளது. மணலில் வளை தோண்டி கூடு மாதிரி உரு வாக்கி, அதில்முட்டைகள் இடப்பட்டு ள்ளன. ஒவ்வொ ரு கூட்டிலும் ஆறேழு முட்டைகள் இருக்கின்றன. இப்படி எரா ளமான முட்டைக் குவியல்கள் இருப்ப தால், ஒரு காலத்தில் இங்கு ஆயிரக் கனக்கான டைனோசர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
டைனோசர் குடும்பத்தை அதன் இடுப்பெலும்பு அமைப்பை வைத் து சௌரிச்சியன்ஸ் (Saurischians) வகை எனவும், ஆர்னித்தோச் சியன்ஸ் (Ornithischians) வகை என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதலாவதில் பல்லி வகை இடுப்பெலும்பும், இரண்டாவ தில் பறவை இன இடுப்பெலும்பும் காணப்படுவதால் இது பறவைக ளின் மூதாதையர் எனப்படுகிறது.
பெரிய பெரிய மிருகங்களை வேட்டையாடிச் சாப்பிடும் மாமி சபட்சனி ரக டைனோசர்கள் மற் றும் வெறும் இலைகளை மட்டுமே சாப்பிடும் சாதுவான சைவ சாரோபோட் ரக டைனோசர்கள் என டைனோசர்களில் பல வகை உண்டு. அரியலூரில் இந்த இரண்டு இன வகை முட்டைகளும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் அந்த இரண்டு இனங்களும் வாழ்ந்திருக்கின்றன என்பது உறுதி யாகிறது. இவற்றின் மீது எரி மலைக் குழம்பு ஓடியதற்கான தடய ங்களும் சிக்கியுள்ளன. தக்காணப் பகுதியில் இருந்த ஏதோ ஒரு எரிமலை, இந்தியத் துணைக் கண்டம் காண்ட்வானா கண்டத் திலிருந்து பிரிந்து சென்று யூரேசிய கண்டத்தில் மோதி வெடித்துச் சிதறிய கால கட்டத்தில், அந்த இயற்கைச் சீற்றத்தில் இங்கு வாழ்ந்த டைனோசர்கள் குடும்ப தோடு அழிந்தி ருக்கலாம். அப்போது எஞ்சிய முட்டைகள் அப்படியே மண்ணில் உறைந்து படிமங்கள் ஆகியிருக்கக்கூடும். உயிரோடு புதைந்த டைனோசர்கள் எலும்பு க்கூடுகள் ஆகி விட்டன என்பதும் கருத் தாக உள்ளது. எது எப்படி யோ, டைனோசர் இனம் எப்படி அழிந்தது என்பதற்கான ஆராய்ச்சி யை இனி எந்த நாட்டு நிபுணரும் அரி யலூரில் வந்து செய்யலாம்.
150 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் இங்கு டைனோசர் எலும்புகளைக் கண்டு பிடித்தனர். அரியலூர் சிமெண்ட் ஆலையின் சுரங்க வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே டை னோசர் முட்டை ஒன்று கிடைத்தது. ஆனால் அப்போது ஸ்பீல்பெ ர்க்கின் ஜூராசிக் பார்க் போன்ற திரைப்படங்கள் வரவில்லை என்பதால், போதுமான விழிப்புணர்வு அப்போது இல்லை. இப்போது உலக வரைபடத்தில் அரியலூருக்கு என்று ஒரு தனி இடம் கிடைச்சாச்சு! இத னால் தமிழர் களுக்கும் தமிழகத்திற் கும் பெருமைதானே! தமிழக அரசின் தனி கவனமும் செயல் பாடுமே இந்தப் பெருமையை போற்றிப் பாது காக்க முடியும் என்பது இந்தியத் தொல் புவியியல் துறை (Geological Survey of India) அதிகாரிகளின் கூற்றாக உள்ளது. கிரெடேசியஸ் சகாப்தத்தில் டைனோசர் இனத்திலிருந்து பறவை கள் உருவான விதம்.