சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றிய தகவல்:

சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றிய தகவல்:

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் தான் உபயோகிக்கப்படுகின்றன.

சிலிண்டரின் தலை பகுதியில் D-13, A-17, B-19 என்று பல விதமான வெவ்வேறு எங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.

Gas_No

பெரும்பாலும் இவை A,B,C,D, என்ற நான்கு எழுத்துகளில் எவையேனும் ஒன்றை கொண்டு துவங்கி அதை தொடர்ந்து ஒரு ஐஃபன் குறியுடன் இரண்டு இலக்கத்தில் 12, 13, 14, 15 என ஏதேனும் எண் குறிக்கப்பட்டிருக்கும்.
A – ஜனவரி, பிப்ரவரி, மார்ச்
B – ஏப்ரல், மே, ஜூன்

C – ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்
D – அக்டோபர், நவம்பர், டிசம்பர்
இரண்டு இலக்க எண்கள் வருடத்தை குறிக்கின்றன.
உதாரணமாக,
13 என்றால் 2013ம் ஆண்டு, 15 என்றால் 2015ம் ஆண்டு என்று பொருள்.
சிவப்பு மற்றும் நீல நிற சிலிண்டர்கள்(Red & Blue Colour LPG Cylinders)

LPG

 

சிவப்பு சிலிண்டர்கள்

  • சிவப்பு என்பது எச்சரிக்கை மற்றும் அபாயம் அதனால் தான் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் சிவப்புநிறம் பூசப்பட்டுள்ளது.
  • வீட்டு உபயோகத்திற்காக(Domestic usage) பயன்படுகிறது

நீல சிலண்டர்கள்

அவற்றிலும் அடிப்பகுதி சிவப்புநிற பூச்சு பூசப்பட்டிருக்கும்.

வணிகத்திற்காக (Commercial Usage) பயன்படுகிறது.

சிலிண்டரின் எடை (Weight of Cylinder)

gas_book

 

 

சிலிண்டரில் நிரப்பப்பட்டசமையல் வாயு உங்கள் வீடுகளில் விநியோகிக்கப்படும் போது அதிலுள்ள திரவநிலை பெட்ரோலியம் வாயுவின் (LPG) எடைமாத்திரம் (உருளையின்எடையில்லாது) 14.2kg.இருக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு வெற்று சிலிண்டரின் எடை 15.7 kg.என்றால் நிரப்பப்பட்டசிலிண்டரின்மொத்தஎடை 29.9 kg.(14.2 kg LPG+15.7)
ஒவ்வொரு சிலிண்டருக்கும் மாறுபடும்.
ஏன் ஒரு சிலிண்டரில் 100% Gas நிரப்பப்படுவதில்லை?

ஒரு சிலிண்டரில் 15 kg வரை LPG நிரப்பமுடியும். ஆனால் அவ்வாறு நிரப்பினால் உயர்அழுத்தம் (High Pressure) மற்றும் வெப்பம்(Temperature) காரணமாகவும் சிலிண்டர் வெடித்துவிட வாய்ப்புள்ளது.
போக்குவரத்து மற்றும் கையாளுதல் காரணமாக 15 kg -ல் 95% – ஆன 14.2 kg LPG நிரப்பப்படுகிறது.

சிலிண்டரின் அடிப்பகுதியில் வளையத்தில் உள்ளதுளை சிலிண்டரின் அடிப்பகுதியில் தண்ணீர் தேங்கி சிலிண்டர் துருபிடிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்ததுளைகள் தான் சிலிண்டரின் அடிப்பகுதிக்கும் தரைக்கும் காற்றுபுகுவதற்கு அனுமதிக்கிறது.
இதனால் சிலிண்டர் துருப்பிடித்து Gas leak ஆவதுதடுக்கப்படுகிறது.Gas

You can also find the explanatory video about This youtube link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook