கூகுள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் தனது சேவையான கூகுள் ரீடரை நிறுத்தபோவதாக அறிவித்தது. கூகுள் நிறுவனம் தனது கூகுள் ரீடர் பயனாளிகளுக்கு வேறு ரீடர் சேவைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ள 3 மாதம் அவகாசம் தந்தது. 3 மாதங்கள் முடிந்த நிலையில் கூகுள் ரீடர் சேவையை கூகுள் நிறுவனம் இன்று நிறுத்துகிறது. கூகுள் நிறுவனம் எதிர்காலத்தில் வேறு பிற சேவைகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அதனால் தான் கூகுள் ரீடர் சேவையை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று 1,00,000 மனுக்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் கூகுள் தங்களது முடிவை மாற்றவில்லை. கூகுளின் இந்த அறிவிப்பிற்க்கு பிறகு அதன் பயனாளிகள் வேறு ரீடர் சேவைகளை தேர்ந்தெடுக்க தொடங்கி விட்டனர்.