தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன் இன்று தஞ்சை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
குரூப் – 4 தேர்வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து உள்ளனர். இன்னும் அதிகமான விண்ணப்பம் வரும் என எதிர்பார்க்கிறோம்.
குரூப் – 4 தேர்வு நேர்மையாக, முறையாக எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நடத்தப்படும். தகுதியான தேர்வர்களை மட்டுமே தேர்வு செய்யும். யார் தலையீடும் இல்லாமல் நேர்மையாக முறையாக தேர்வு நடைபெறும்.
தேர்வாணையம் மூலம் நடைபெறும் தேர்வுகளில் இடைத்தரகர்கள் யாராவது வேலை வாங்கி தருகிறோம் என்று கூறி பணம், பொருள் பெற முயற்சி செய்தால் எங்களுக்கு உடன் தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்கள் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்.
இடைத்தரகர்களுக்கு இங்கு வேலை கிடையாது. கடந்த முறை வினாத்தாள் வெளியானது தொடர்பாக குற்ற விசாரணை நடந்து வருவதால் அது தொடர்பாக நான் கருத்து கூறமுடியாது. இனிமேல் கேள்வித்தாள் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்