ஐந்து மாதத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஐந்து மாதத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

கோவை: கோவை மாநகரில் கடந்த ஜனவரி முதல் மே வரை, ஐந்து மாதங்களில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என, 294 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இதில், 80 சதவீதம் பேர் ஆண்கள்.
தமிழகத்தில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அடுத்தபடியாக, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை உள்ளது. காதல் தோல்வி, கள்ளத்தொடர்பு, குடும்பத்தகராறு, கடன் தொல்லை, வேலையின்மை, தீராத நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலரும் உயிரை துறக்கின்றனர். நடப்பாண்டு ஐனவரி முதல்

மே வரை, 294 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில், 233 ஆண்கள், 61 பெண்கள் அடங்குவர். தூக்குப்போட்டு தற்கொலை செய்த ஆண்களின் எண்ணிக்கை 74; பெண்களின் எண்ணிக்கை 17. சாணிபவுடர், விஷம் உள்ளிட்டவற்றால் உயிரை மாய்த்த ஆண்கள் 37, பெண்கள் 16 பேர். உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 10; இதில், மூன்று ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள்.

இவை தவிர, பிற வழிகளின் மூலம் 140 பேர் அவர்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 119 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 21. தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் 80 சதவீதம். கடந்தாண்டு தற்கொலை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 658. கடந்தாண்டை ஒப்பிட்டுபார்க்கும் போது, இந்தாண்டு ஐந்து மாதத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம். தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் விழிப்புணர்வு வழிகள் குறித்து, மனநல மருத்துவர் மோனி கூறியதாவது:மனச்சோர்வு, பொருளாதார நெருக்கடி, தாழ்வு மனப்பான்மை, வேலையின்மை, முடிவெடுக்க முடியாத நிலை போன்றவற்றால், “கிரியோடின்’ மற்றும் “நார்அட்ரினின்’ குறைபாட்டால் அதிகமானோர், தற்கொலை முடிவுகளை தேர்ந்தெடுக்கின்றனர். தற்கொலை

செய்பவர்களில் 50 சதவீதம் பேர் 35 வயதுக்குள் இருக்கின்றனர்.

வாழ்க்கை முறை மாற்றத்தால், இளம் தலைமுறையினர் பெற்றோர்களிடம் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. பெற்றோர்களின் வழிகாட்டுதல், அரவணைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், பிரச்னைகளை எதிர்கொள்ள இளம் தலைமுறையினர் திணறுகின்றனர்.”வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, தற்கொலை ஒரு தீர்வல்ல’ என்பதை உணர்த்தும் வகையில், டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம். மேலும், 24 மணி நேரம் இயங்கும் மருத்துவமனைகளில், “ஹாட்லைன் சென்டர்’ அமைத்து, கவுன்சிலிங் தரலாம். தற்கொலை செய்பவர்களுக்கு, உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.இவ்வாறு டாக்டர் மோனி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook