‘உன்னை விட்டு வாழ முடியவில்லை’: திவ்யாவுக்கு இளவரசன் எழுதிய கடிதம் முழு விவரம்

‘உன்னை விட்டு வாழ முடியவில்லை’: திவ்யாவுக்கு இளவரசன் எழுதிய கடிதம் முழு விவரம்

இளவரசன் தற்கொலை செய்வதற்கு முன் திவ்யாவுக்கு 4 பக்கங்களில் உருக்கமான கடிதம் எழுதி இருந்தார். அந்த கடித விவரம் முழுமையாக கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாது. நீ என்னை விட்டுப் பிரிந்த நாளில் இருந்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம் எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். ஜூலை 1–ந் தேதி வரை நீ வருவாய், என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ஒருவேளை நீ அன்று என்னுடன் வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் இந்த உலகத்தில் இருக்கமாட்டேன்.

நீ ஏற்கனவே உன் அப்பா இறந்ததற்கு காரணம் நீ தான் என்று நினைத்து கஷ்டப்படுகிறாய். நீ அடிக்கடி என்னிடம் சொல்வாய், ‘என் அப்பா உண்மையாகவே என் மீது பாசம் வைத்தவராய் இருந்தால் என்மேல் கொலைப்பழியை போட்டு விட்டு என் வாழ்க்கையை இப்படி செய்திருக்க மாட்டார்’ என்று சொல்வாய்.

அதுபோலவே நீ என்னிடம் கேட்பாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையாகவே என்னால் உன்னை விட்டு வாழ முடியவில்லை. ஏன் எனில் அந்த அளவிற்கு நாம் 2 பேரும் இருந்தோம். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் திவ்யா, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன்? என்கூட ஏன் வாழ வரமாட்டேங்கறன்னு கண்டிப்பா எனக்குத் தெரியல…

நாம இரண்டு பேரும் எவ்வளவு கஷ்டத்துக்கும் மேல ஒன்று சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும். எனக்கு ரொம்ப ஆசை திவ்யா. நம்ம இரண்டு பேரும் நல்லா வாழணும், நம்மள கேவலமாய் பாத்தவங்க முன்னாடி பொறாமைப்படும் அளவுக்கு உன்ன அழகா, கண் கலங்காம வச்சுக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை.

உனக்கு ஒன்று தெரியுமா? நீ என்னோட எல்லா விசயத்துலையும் சேர்ந்திருக்க. ஆனா இப்போ எதிலும் எங்கூட இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்குடா. ப்ளீஸ் திவ்யா என்ன வெறுக்காத. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.

தயவு செய்து என்னை மன்னித்துவிடு. நீ என்னிடம் கேட்கலாம், உண்மையாகவே நீ என் மேல் பாசம் வைத்தவனாக இருந்தால் ஏன் நீ என்னை விட்டு போகனும்னு…

கண்டிப்பா சொல்றேன் நான் உன்ன விட்டுப் போகனும்னு நெனக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழனும்னு ரொம்ப ஆசை. ஆனால் என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா. என்னை மன்னிச்சுடு, நான் இந்த உலகத்தை விட்டுப் போறேன். இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும் நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா.

ஐ லவ்யூ ஷோ மச்… ஐலவ் ஷோ மச்…

என்னை மன்னிச்சுடுங்க, அப்பா அம்மாவையும். பாலாஜி, அக்கா எல்லோரையும் பாத்துகோங்க. தயவுசெஞ்சி அம்மாவை கஷ்டப்படுத்தாதீங்கப்பா.

என் நேசமிகு அம்மாவிற்கு அம்மா என்னை மன்னிச்சுடு. எனக்கு உன்னை நல்லா வெச்சி பார்க்கனும்னு ஆசை. நீயும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க என்னை வளர்த்து படிக்க வைக்க, ஆனால் என்னால உங்களுக்கு எதுவுமே செய்ய முடியல…

அடுத்த ஜென்மம்னு ஒன்று இருந்தா நீயும், அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கனும். இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மம் தீர்க்கனும்.

என்னோட பெஸ்ட் பிரண்ட் என் அண்ணன் பாலாஜிக்கு…

நீ எனக்கு எவ்வளவோ சொன்ன தப்பான முடிவு எடுக்காதன்னு. ஆனால் என்னால முடியல பாலா. ஐ எம். ரியலி ஷோ சாரி பாலா.

என்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை. இது என் சுயமான முடிவாகும். என்னுடைய கடைசி ஆசை, நான் இறந்த பின்பு என்னைப் பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஒருவேளை திவ்யா வந்தால் யாரும் அவளைத் திட்ட வேண்டாம், அவளை அனுமதிக்க வேண்டும்.

ப்ளீஸ்.. அவளை யாரும் கோபமாகப் பேசவேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். என்னால அவ கஷ்டப்படறது எனக்கு பிடிக்கல. அவளாவது வாழ்க்கைல சந்தோசமா இருக்கட்டும்.

‘ஐ லவ் யூ ஷோ மச் டா பேபி திவ்யா…’

இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook