இளவரசன் நண்பரிடம் விசாரணை?

இளவரசன் நண்பரிடம் விசாரணை?

இளவரசன் மரணம் தொடர்பாக அவரது உயிர் நண்பர் பாரதியிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அவரது செல்போன் எண் மற்றும் இளவரசனின் செல்போன் எண்களுக்கு வந்த அழைப்புகள் மற்றும் அவர்கள் யார்–யாரிடம் பேசினார்கள்? என்ற விவரத்தையும், இளவரசன் இறந்த அன்று அவர் யார்–யாரிடம் பேசினார் என்றும், அவர் செல்போன் சிக்னல் எந்தெந்த இடங்களை காட்டியது என்ற விவரங்களையும் தனிப்படை போலீசார் சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.

இளவரசன் கல்லூரி இடைவேளையிலும், விடுமுறை நாட்களிலும் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே உள்ள திண்டில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார்.

இந்த விவரம் அவரது நண்பர் பாரதிக்கு தெரியும் அவர்தான் இளவரசனை கொலை செய்ய வந்த கும்பலுக்கு தகவல் தெரிவித்தார் என்று இளவரசனின் தந்தை இளங்கோ கூறி உள்ளார்.

மேலும் இளவரசன் இறந்தது முதல் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பாரதி வரவில்லை என்பது இளவரசனின் தந்தைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாரதி தலைமறைவாக இருக்கலாம் அல்லது போலீஸ் பிடியில் இருக்கலாம் என்று இளங்கோவின் உறவினர்கள் கருதுகிறார்கள்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது அவர்கள் எதுவும் கூற மருத்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook