பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனம் இந்தியா முழுக்க இலவச ரோமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெரிய டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் இந்த தகவலை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஐடியா செல்லுலார் நிறுவனமும் இலவச ரோமிங் பேக்குளை அறிவித்தது. ஏர்டெல் நிறுவனம் இலவச ரோமிங் சேவையை பயன்படுத்த இரண்டு பேக்குகளை அறிவித்துள்ளது. ஏர்டெல் பயனீட்டாளர்கள் RS.5 செலுத்தி ஒரு நாள் முழுவதும் இந்தியா முழுக்க இலவசமாக இன்கம்மிங் ரோமிங் கால்களை பேசலாம். உங்களுக்கு ரோமிங் சேவை அதிக நாட்கள் வேண்டும் என்றால் RS.79 செலுத்தி ஒரு மாதம் முழுவதும் இந்தியா முழுக்க இலவசமாக இன்கம்மிங் ரோமிங் கால்களை பேசலாம்.
இந்த சலுகைகள் ஏர்டெல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கே பொருந்தும். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பு இன்னும் வரவில்லை. இதை தொடர்ந்து ஐடியா செல்லுலார் நிறுவனம் தனது 123 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இலவச ரோமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடியா வாடிக்கையாளர்கள் RS.35-40(விலை மாநிலத்தை பொருத்து மாறும்) செலுத்தி 6 மாதத்திற்க்கு இந்தியா முழுக்க இன்கம்மிங் ரோமிங் கால்களை 75 பைசாவில் பேசலாம். இலவச சேவைக்கு RS.230-240(விலை மாநிலத்தை பொருத்து மாறும்) செலுத்தி 6 மாதத்திற்க்கு இந்தியா முழுக்க இலவசமாக இன்கம்மிங் ரோமிங் கால்களை பேசலாம். பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனம் இந்தியா முழுக்க இலவச ரோமிங் சேவையை முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.