இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவிகளை வழங்க வேண்டும் என்று ராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் அரிய முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இதன் முதல் கட்டமாக, மத்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜன் பக்ஷிக்கு துணையாக (ஏ.டி.சி.) ராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியாக பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் கனெவே லால்ஜி என்ற பெண் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 1-ம் தேதி பதவியேற்றுக் கொள்ளும் இவர் 350 பெண் ராணுவ அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3-வது தலைமுறையாக ராணுவத்தில் பணியாற்றி வரும் கனெவே லால்ஜி, புனேவில் இளநிலை அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியவர். ராணுவ புலனாய்வு பிரிவிலும் இவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.
ராணுவத்தின் ஏ.டி.சி. பதவி என்பது ராணுவ தளபதிகளுக்கு நேர்முக உதவியாளராக இருக்கும் முக்கியமான பதவியாகும்.