தேள் என்ற சொல்லை கேட்டாலே அதனிடம் கொட்டு வாங்கியவர்களுக்கு பயம் தொற்றி கொள்ளும் அத்தகைய வலியை கொடுக்கும் விஷமுள்ளது தேள். இத்தகைய தேளை கடந்த 15 வருடங்களாக ஒருவர் தின்று வருகிறார். அதாவது,
அடி இல்லையென்றால் கடி என்று சொல்வார்கள். அதைப்போல் நாமெல்லாம் தேளை கண்டால் அடித்துக் கொன்றுவிடுவோம் ஆனால், ஈராக்கை சேர்ந்த இஸ்மாயில் ஜசிம் முகமது (34) என்ற விவசாயின் வாழ்க்கையில் வேறு. அவர் உயிருடன் தேள்களை பிடித்து கடித்து தின்று வருகிறார்.
இஸ்மாயில் ஜசிம் முகமது கடந்த 15 வருடங்களாக தேள்கள் மற்றும் பாம்புகளுடன் வாழ்ந்து வந்து இருக்கிறார். அதனால் அவர் பலமுறை தேள்களால் கொட்டு வாங்கி மிகவும் அவதிப்பட்டிருக்கிறார்.
இதனால் வெறுப்படைந்த அவர் அவைகளை கடித்து தின்னுவது என்ற முடிவை எடுத்தார். அன்றிலிருந்து கடந்த 15 வருடங்களாக உயிருடன் தேள்களை பிடித்து கடித்து தின்று வருகிறார்.
மூன்று நாட்களுக்குள் ஒரு தேளையாவது தின்னவேண்டும் என்கிற கட்டாயத்தில் தினந்தோறும் நான் தேள்களை உயிருடன் பிடித்து தின்று வருகிறேன். பலமுறை வாயில் கடி வாங்கிய எனக்கு அதுவே எதிர்ப்பு மருந்தாக மாறிவிட்டது என்று அனைவரையும் அதிர வைக்கிறார்