தென் ஆப்பிரிக்க இனவெறிக்கு எதிராக போராடியவரும், முதல் கருப்பின அதிபருமான நெல்சன் மண்டேலாவிற்கு வயது 94. நுரையீரல் தொற்று காரணமாக அவதியுற்று வரும் அவர் கடந்த 8-ம் தேதி பிரிடோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரின் நிலைமை 24 மணி நேரத்தில் மிகவும் மோசமாகிக்கொண்டிருப்பதாக ஜனாதிபதி மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிபர் ஜாகோப் ஜூமா நேற்று மாலை அவரை சந்தித்து வந்த பின்னர் இந்த செய்தியை உறுதிபடுத்தினார்.