அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ளது பற்றி இந்து சமய அறநிலைய துறை செயலர் கண்ணன், ஆணையர் தனபால்,தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற நிபுணர் நரசிம்மன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட பின் விதிமுறை மீறி கோவிலுக்கு அருகில் கட்டிடம் கட்டியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
மேலும் மதில் சுவர் அமைக்க வசதியாக அருகில் 10 அடிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி மேற்பார்வையில் பொறியாளர் சந்திரன், செயற்பொறியாளர் அருணாச்சலம், உள்ளூர் திட்ட உதவி இயக்குனர் முத்தையன்,
ஸ்ரீரங்கம் கோட்ட உதவி கமிஷனர் ரங்கராஜன், உதவி செயற் பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகள் நேற்று கோவில் அருகில் விதிமுறை மீறி கட்டப்பட்டிருந்த ஒரு அப்பார்ட்மெண்டில் உள்ள தரை தளத்தில் உள்ள 4 வீடுகள் மற்றும் முதல் தளத்தில் உள்ள 4 வீடுகள் என மொத்தம் 8 வீடுகளுக்கும் சீல் வைத்தனர்.
அங்கு குடியிருந்தவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் தண்டபாணியிடம் கேட்ட போது, திருச்சி மாநகரில் விதி மீறி கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் என 60 கட்டிடங்களுக்கு தற்போது நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்குள் அந்த கட்டிடங்களில் விதி மீறலை அகற்றி கொள்ளாவிட்டால் இதே போல் சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என்றார்.
மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கான மதில் சுவர் அமைந்துள்ள சித்திரை வீதிகள், உத்திர வீதிகள், அடைய வளஞ்சான் வீதிகளில் மதில் சுவர் சீரமைக்கும் பணி நடக்க இருப்பதால் மதில் சுவரின் அருகே 10 அடி துரத்தில் காலி இடம் ஏற்படுத்தப்பட உள்ளது என்றும் அவ்வாறு 10 அடி தூரத்துக்கு காலி இடம் ஏற்படுத்தும் போது அருகில் உள்ள 100 வீடுகள் இடிக்கப்படும் நிலையில் உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.