சென்னை சிறுமி பிரிட்டனில் சாதனை

சென்னை சிறுமி பிரிட்டனில் சாதனை

லண்டன்: சென்னை, வேளச்சேரியில் பிறந்த மைதிலி, தனது 10வது வயதில் எழுதிய சிறுகதையை, பிரிட்டனின் இளைய எழுத்தாளர்கள் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

 

ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோராக இருப்பதில்லை; ஆனால் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரே என்ற பொன்மொழிக்கு இணங்க, சென்னையைச் சேர்ந்த ராஜேந்திர குமார்- பிந்து தம்பதி, தங்களுடைய குழந்தை மைதிலியை வளர்த்துள்ளனர். மைதிலிக்கு 3 வயதானபோது லண்டன் சென்ற இவர்கள் அங்குள்ள பள்ளியில் மைதிலியைச் சேர்த்தனர். தற்‌போது 10 வயதாகும் மைதிலி, ‘என் வாழ்வைத் தலைகீழாக புரட்டிப்போட்ட நாள்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதினாள். அந்த சிறுகதையை பிரிட்டனின் இளைய எழுத்தாளர்கள் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டு கவுரவித்துள்ளது.

மைதிலிக்கு கிடைத்த கவுரவம் குறித்து அவளுடைய பெற்றோர் கூறியதாவது: ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கதை எழுதுதல், படித்தல் போன்றவை மைதிலியின் பொழுதுபோக்காக உள்ளது. அவளுடைய குழு, பள்ளிகளுக்கு இடையே‌யான கணிதப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இலக்கணப் பள்ளியில் சேர்வதற்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளாள். கூடுதலாக படிக்கும் பழக்கத்திற்கான விருதும் கிடைத்துள்ளது. கர்நாடக இசைக்கான லண்டன் பள்ளியில் வாய்ப்பாட்டிற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளாள். அடுத்து அவளை இலக்கண பள்ளியில் சேர்க்க இருக்கிறோம். வெளிநாடுகளில் வந்து குடியேறுபவர்கள், தஙகள் குழந்தைகள் நமது கலாச்சாரத்தை மறந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; வெளிநாடுகளில் குடியேறுவது அதிக வாய்ப்புகளை வழங்கும். அனைவரும் இத்ததகைய இளைய தலைமுறையினரின் சாதனையை ஊக்குவிக்க வேண்டு்ம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook