வத்தலகுண்டு அருகே குன்னுவாரன்கோட்டையைச் சேர்ந்த முத்தையா மகள் முத்துலட்சுமி (16). இவர் 10 ஆம் வகுப்பில் 305 மதிப்பெண்களே எடுத்திருந்தாராம். இதனால் மனமுடைந்த அவர் தீக்குளித்த நிலையில் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.