நியூயார்க்: ஆங்கிலம் தெரியாத நம்ம கிராமத்து அப்பத்தாக்கள் கூட, தங்கள் கொள்ளு பேரன், பேத்திகளை ஆங்கிலத்தில் ‘ஹாப்பி பர்த் டே டூ யூ’ எனத் தான் பாடி வாழ்த்துகிறார்கள். அந்தளவுக்கு பிரபலமானது அந்தப் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல். ஆனால், தற்போது அந்தப் பாடல் எங்களுக்குத் தான் சொந்தம். எங்கள் அனுமதியில்லாமல் யாராவது அந்தப் பாடலைப் பயன் படுத்தினால் நஷ்ட ஈடு தர வேண்டும் எனக் கூறி பிரபல நிறுவனம் ஒன்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து, ஹேப்பி பர்த்டே பாடல் அனைவருக்கும் சொந்தம் என உத்தரவிடக் கோரி வழக்கு ஒன்று அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.