அனைத்து கள்ளி இனச்செடிகளைப்போல சப்பாத்திக் கள்ளியும் அமெரிக்காவைச் சேர்ந்தவையே
சப்பாத்திக் கள்ளி இனங்கள் மிகுதியாகக் காணப்படுவது மெக்சிக்கோ
தமிழ்நாட்டில் பரவலாக தரிசு நிலங்களிலும் வேளியோரங்களிலும் காணப்படுகின்றன.
இவற்றில் இரண்டுவிதமான முட்கள் காணப்படுகின்றன
அவை பெரிய முட்கள், மெல்லிய முட்கள் ஆகும். இதில் பெரிய முட்கள் தோலில் கடுமையாகக் குத்தி கிழிக்கககூடியனவாகவும், சிறியமுட்கள் குத்தி மாட்டிக் கொண்டால் எளிதில் அகற்ற இயலாததாகவும் இருக்கும்.
சப்பாத்திகள்ளி பழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முற்கள்.
இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிட முடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும். பின் கவனமாக பழத்தை பிரித்தால் உள்ளே, நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும்.
அப்படியே சாப்பிட தொண்டையில் அந்த முள் சிக்கி அதிக சிரமத்தை தரும். அந்த தொண்டை முள்ளயை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும். இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும்.